இலங்கையில் வரலாறு காணாத விலை அதிகரிப்பில் பச்சை மிளகாய்!
மாத்தளையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாகிள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
பல நுகர்வோர் தற்போது 50 கிராம் பச்சை மிளகாயை மாத்திரமே வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் தற்போது வரையில் சந்தையில் கிடைக்கும் பச்சை மிளகாய் பாரிய அளவு வீழச்சியடைந்துள்ளது. இதன் காரணமாகவே ஒரு கிலோ பச்சை மிளகாய் இந்த அளவிற்கு விலை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பச்சைமிளகாய் தற்போது 1600 ரூபா வரை அதிகரித்துள்ளது. அடுத்து வாரங்களில் இது பல மடங்கு அதிகரிக்கலாம் என நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.