நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய்
சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் சில மரக்கறிகளின் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
பச்சை மிளகாயின் விலை
இந்தநிலையில், பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், பச்சை மிளகாய் ஒன்றுக்கு 15 முதல் 20 ரூபா வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பொருளாதார நிலையங்களுக்கு வழங்கப்படும் மரக்கறிகளின் அளவு வழமையை விட பாரிய அளவு குறைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த நாட்களில் பெய்த கனமழையால் காய்கறி பயிர்கள் அழிந்து, தொண்ணூறு சதவீதம் (90%) பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறிகளின் விலை
அதன்படி நேற்று (31) நாடளாவிய ரீதியில் சந்தைகளில், பல வகையான மரக்கறிகள் கிலோ ஒன்று 300 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, போஞ்சி 750 ரூபாய், முட்டைகோவா 550 ரூபாய், கரட் 900 ரூபாய், தக்காளி 600 ரூபாய், பீட்ரூட் 800 ரூபாய், முள்ளங்கி 450 ரூபாய், வெண்டிக்காய் 350 ரூபாய், கத்திரிக்காய் 650 ரூபாய், கறி மிளகாய் 800 ரூபாய் என்ற விலைக்கும் அதற்கு மேற்பட்ட விலைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |