லண்டனில் 40 வருடமாக போராடிய இலங்கை தமிழருக்கு கிடைத்த பெரும் வெற்றி
பிரித்தானியாவில் 40 வருடங்களாக வாழ போராடிய இலங்கை தமிழர் ஒருவர் இறுதியாக வெற்றி கண்டுள்ளார்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் கணக்காளராகப் பயிற்சி பெற பிரித்தானியாவுக்கு வந்த இலங்கை தமிழரான பொன்னம்பலம் ஜோதிபாலா என்பவர் தற்போதே அனுமதி பெற்றுள்ளார்.
பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் தவறுகள் காரணமாக வீடற்ற நிலையில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது 70வது பிறந்த நாளுக்கு சில மாதங்களுக்கு முன்னரே அவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
69 வயதுடைய இலங்கைத் தமிழரான பொன்னம்பலம் ஜோதிபாலா, இப்போது வயதானவராக இருந்தாலும், இறுதியாக தனக்கு கிடைத்த வழக்கு தீர்ப்பு குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2003 ஆம் ஆண்டு மோசடி மற்றும் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டில் தண்டனை பெற்றமையினால் உள்துறை அலுவலகம் அவரை நாடு கடத்த திட்டமிட்டது. ஆனால் அவர் மேல்முறையீடு செய்தார்.
2006ஆம் ஆண்டு குடிவரவு நீதிபதி அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். ஜோதிபாலாவின் மேல்முறையீட்டில் அவர் வெற்றி பெற்றார் என பதிவிடுவதற்கு பதிலாக அவர் தோல்வியடைந்து விட்டார் என்று உள்துறை அலுவலகம் தவறாகப் பதிவு செய்துள்ளது.
எப்படியிருப்பினும் அதிகாரிகள் அவரை பிரித்தானியாவில் இருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.
இந்த நிலையில் ஜோதிபாலாவின் வழக்கறிஞர் நாக கந்தையா கடந்த ஆண்டு உள்துறை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார், இந்த விவகாரத்தை விரைவாக தீர்க்காவிட்டால், நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தாக்கல் செய்வேன் என வழக்கறிஞர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவர் தான் விரும்பியபடி பிரித்தானியாவில் வாழ உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
You My Like This Video