கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் காணிகளுக்கு பெரும் தட்டுப்பாடு! - ஆணையாளர் வெளியிட்ட தகவல்
அடுத்து வரும் சில நூற்றாண்டுகளில் இலங்கையின் பிரதான நகரங்களில் காணி ஒதுக்கீட்டுக்கான நிலப்பரப்பு இல்லாத பாரிய நெருக்கடி ஏற்படும் என காணி ஆணையாளர் நாயகம் கீர்த்தி கமகே தெரிவித்துள்ளார்.
ஆனால் இது குறித்து எதுவும் செய்ய முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“கிராமப் பகுதிகளில் நிலங்கள் உள்ளன, ஆனால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி போன்ற முக்கிய நகரங்களில் நிலங்கள் எதுவும் இல்லை. யாரும் நிலத்தை வாங்கவோ கோரவோ முடியாது.
கம்பஹா மாவட்டத்திலும், கொழும்பு மாவட்டத்திலும் பெரிய நிலங்கள் எதுவும் இல்லை. அவை பொருளாதார ரீதியாக மட்டுமே மதிப்புமிக்கவை, எனவும் காணி ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.
"நிலங்கள் இல்லாதவர்களுக்கு இது ஒரு பெரிய நெருக்கடி. நிலங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட வளமாகும். தற்போது நிலங்களை பாதகமான முறையில் பயன்படுத்துகிறோம்.
இந்த நிலங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் ஒதுக்குவது என்பது குறித்து அரசாங்கம் உடனடியாக கொள்கை வாரியாக முடிவெடுக்க வேண்டும். சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும், அதற்கான வலுவான தேவை இப்போது உள்ளது,
மக்கள் இப்போது அதிகபட்ச காணிகளை பயன்படுத்துகின்றனர். இந்த காணிகளை நிர்வகிப்பதிலேயே தங்கியுள்ளது.
"ஒரு ஏக்கர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால், அதைப் பிரித்து மேலும் மூன்று அல்லது நான்கு நபர்களுக்கு வழங்க வேண்டும், அதையே நாங்கள் செய்ய வேண்டியிருக்கும்."
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காணிகளை திறம்பட பயன்படுத்துவது முக்கியமானது.சீனா போன்ற நாடுகளில் செங்குத்தாக வீடுகளை கட்டுகிறார்கள். ஆனால் அவ்வாறு இங்கே நடப்பதில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
