உண்மையை மூடி மறைக்க மாபெரும் அரசியல் சூழ்ச்சி!தேவாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள்
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலுக்கு நீதி கோரி நாடு முழுவதும் இன்று கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து அரசு அதன் பொறுப்புக்கூறலையும் கடமைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையேல் சர்வதேசத்தை நாடுவோம் என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.
அத்துடன் இந்தத் தாக்குதலுக்கு நீதியை வலியுறுத்தும் விதமாக வீடுகள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் என்பவற்றில் இன்று கறுப்புக் கொடி ஏற்றுமாறு கத்தோலிக்க திருச்சபை கேட்டுக்கொண்டிருந்தது.
அதற்கமைய பொதுமக்கள் இன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், வணக்கஸ்தலங்களிலும் கறுப்புக் கொடிகளை ஏற்றினர்.
இதேவேளை, "உண்மையை மூடி மறைப்பது மாபெரும் அரசியல் சூழ்ச்சி!உண்மையைக் கண்டறிய ஒன்றிணைவோம்" என்று வாசகங்கள் எழுதபட்ட பதாதைகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வாசற்பகுதியில் இன்று வைக்கப்பட்டிருந்தது.
தேவாலயத்தில் இன்று விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இன்று நடைபெற்ற இந்தக் கறுப்புக் கொடி போராட்டம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது என்று கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam