தீவிரமான சூழ்நிலையை ஏற்படுத்தும் புதிய திருத்த சட்டமூலம்! விஜித ஹேரத் எச்சரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக பதவியேற்ற பின் 250 முதல் 300 வரையிலான மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வரம்பற்ற எண்ணிக்கையிலான உரிமங்கள்
இந்த நிலையில், புதிய பந்தய திருத்த சட்டமூலம் நாட்டில் உள்ள, சூதாட்ட விடுதிகளுக்கு ஏற்கனவே உள்ள நான்கு உரிமங்களைத் தவிர வரம்பற்ற எண்ணிக்கையிலான உரிமங்களை வழங்க அனுமதிக்கும் என விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நாட்டில் வரம்பற்ற சூதாட்ட விடுதிகள் நிறுவப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது ஒரு தீவிரமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
