யாழில் மூதாட்டி படுகொலை :விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்(photos)
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி இன்று (24) கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை
காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ள சாணை தவமணி என்ற 78 வயதுடைய மூதாட்டியே கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்கு உறவினர் ஒருவர் சென்றுள்ளார்.
இதன்போது மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam