மலையகம் - 200 என்ற தொனிப்பொருளில் நுவரெலியாவில் மாபெரும் நிகழ்வு ஆரம்பம் (video)
மலையக தமிழர் வரலாற்றை பறைசற்றும் முகமாக மலையகம் - 200 என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று முதல் 20ஆம் திகதி மற்றும் 21ஆம் திகதிகளில் நுவரெலியா மாவட்டத்தில் அருங்காட்சியகம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிகழ்வினை கண்டி சமூக அபிவிருத்தி நிருவகம் ஏற்பாடு செய்துள்ளது.
மலையகத்தின் 200 வருடகால வரலாற்றை நடமாடும் அருங்காட்சியகம் ஊடாக 25 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.
மலையக தமிழர் வரலாறு
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் அழைத்து வரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலே இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகனேஷன், திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சக்திவேல் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.