நிர்வாக இடைஞ்சலால் வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு உடன் நியமனம் வழங்குக! சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
நிர்வாக இடைஞ்சலால் வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வழங்குங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நிர்வாக இடைஞ்சல் காரணமாக 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய திட்டத்தில் இருந்து 465 பட்டதாரிகள் வெளியேறியுள்ளனர். இது தொடர்பில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்கும், சம்பந்தப்பட்ட விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கும் அறிவித்த போதும் உரிய ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்த 2023 ஆம் ஆண்டுக்குள்ளாவது தலையிட்டு இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வை
வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்" என்றார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
