போதைப்பொருள் உட்கொண்ட தரம் 5 மாணவர்கள்: வெளியான காரணம்
தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் குருநாகல் - மதுராகொட பிரதேச ஆரம்ப பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மேலதிக விசாரணை
மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய 3 மாணவர்களுடன் சேர்த்து அருந்தி உள்ளனர்.
இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 4 மாணவர்களும் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரித்துள்ளனர்.
பாடசாலைக்கு மாத்திரைகளை எடுத்துச் சென்ற மாணவனின் தந்தை ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் அவர் மீது போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுராகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
