நாடளாவிய ரீதியில் இன்று புலமைப்பரிசில் பரீட்சை: ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
நாடெங்கிலும் 2,888 மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு சுமார் 3,37,596 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
இன்று (15.10.2023) புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் ஆலயங்களில்
வழிபாடுகளை மேற்கொண்டு பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காண முடிந்தாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் பரீட்சை இடம்பெறுகிறது. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, சம்மாந்துறை,அக்கரைப்பற்று கல்வி வலயங்களிலும் பரீட்சை ஆரம்பமாகியுள்ளதுடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு பெற்றோருடன் வருகை தந்திருந்தனர்.
ஹட்டன் கல்வி வலயம்
மேலும் ஹட்டன் கல்வி வலயத்தில் இவ்வருடம் பரீட்சைக்கு 34 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறுகின்றன.
இந்த பரீட்சைக்கு தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளிலிருந்து 4140 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சகல பரீட்சை நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி- மலைவாஞ்சன் மற்றும் பாறுக் ஷிஹான்
இதேநேரம் வடக்கில் பரீட்சைக்குத் தோற்றும மாணவர்களில் யாழ்ப்பாணம் ஒன்று வலயத்தில் 12 இணைப்பு நிலையங்களின் கீழ் 41 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 782 மாணவர்கள் பராட்சைக்குத் தோற்றிய அதேநேரம், யாழ்ப்பாணம் 02 வலயத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 54 பரீட்சை நிலையங்களில் 5 ஆயிரத்து 208 மாணவர்கள் பராட்சைக்குத் தோற்றுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2ஆயிரத்து 219 மாணவர்களும், முல்லைத்தீவில் 09 இணைப்பு நிலையங்களின் கீழ் 24 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 162 மாணவர்களும், வவுனியா மாவட்டத்தில் 14 இணைப்பு நிலையங்களின் கீழ் 34 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 212 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய அதேநேரம் மன்னாரில் 16 இணைப்பு நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 176 மாணவர்கள் தோற்றியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி- கஜிந்தன்
வவுனியா மாவட்டத்தில் 34 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 212 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுயுள்ளனர்.
அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் 14 இணைப்பு நிலையங்களின் கீழ் 34 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்து 212 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
செய்தி-திலீபன்








ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
