புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் (15.10.2023) நடைபெறவுள்ள நிலையில், 3,37,596 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இந்த ஆண்டு 2,888 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பரீட்சையில் மாணவர்கள் முதலில் இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டுமென திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லசிக சமரகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோரிடம் கோரிக்கை
இதற்கமைய, உரிய நேரத்தில் மாணவர்களை பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அனர்த்தங்கள் அல்லது அவசர நிலை காரணமாக பரீட்சை நிலையத்திற்கு வர முடியாத மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர்கள்.....! உலகை கதிகலங்க வைத்த போரின் சூத்திரதாரிகள்





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 8 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
