புலமைப்பரிசில் பரீட்சையில் புதிய நடைமுறை:வெளியானது அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
பரீட்சை அனுமதி அட்டை தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படமாட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய முறைமை

பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களின் வருகைப் பதிவுகளை கொண்ட முறைமை ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக இந்த முறைமை செயற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam