தேர்தலை நடத்த பணமில்லை என்பதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்-நவீன்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிறுத்தப்படுமாயின் அது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய மாத்திரமே நடக்கும் என ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தலை நடத்த நிதியமைச்சிடம் பணமில்லை
இதனை விடுத்து தேர்தலை ஒத்திவைக்க வேறு வழிகள் இல்லை. இந்த தேர்தல் தொடர்பாக பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனால், தேர்தல் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தல் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு மிக விரைவில் கிடைக்க வேண்டியது அவசியம்.
தேர்தல் ஒன்றை நடத்துவதன் மூலம் மக்களின் நிலைப்பாடுகளை அறிந்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும். எனினும் நிதியமைச்சிடம் பணம் இல்லை என்பதால், செயற்பாட்டு ரீதியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது சிரமம்.
இதனடிப்படையில், அடுத்த சில தினங்களில் தேர்தலை நடத்த பணமில்லை என்பதை அரசாங்கம் உத்தியோபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நவீன் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
