இந்த அரசாங்கம் தகுதியானவர்களுக்கு உரிய இடங்களை வழங்கும்
இந்த அரசாங்கம் தகுதியானவர்களுக்கு உரிய இடங்களை வழங்கும் என அமைச்சர் பிமல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போன்ற தேசிய சொத்துக்களை மேம்படுத்துவது ஒரு தேசியத் தேவையாகும் என்றும், அதற்காகத் திறமையான மேலாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களா என்று பார்க்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நேர்மையான திறமை கொண்ட நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் தொடர்ந்து பொறுப்புகளையும் வாய்ப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குச் சிறந்த உதாரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவராக நியமித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச நிறுவனங்களிலும் இத்தகைய திறமையாளர்களுக்குப் பொறுப்புகளை வழங்க அரசாங்கம் தயங்காது எனத் தெரிவித்துள்ளார். குமார் சங்கக்கார, சிதத் வெத்தமுனி மற்றும் ரொஷான் மஹாநாம போன்ற அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாட்டை மறுசீரமைக்கும் பொறுப்பு, அரசியல் பேதமின்றி திறமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திறமைக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த அணுகுமுறை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தொலைநோக்கு பார்வைக்கு இணங்க முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் விளக்கமளித்தார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு திறமையானவர்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறத்தியுள்ளார்.
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam