அமைச்சரின் உதவியாளர்களுக்கு அரசாங்க வாகனம்! முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் (Nalinda Jayathissa) உதவியாளர்களுக்கு அரசாங்க வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள விடயம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வர முன்பதாக அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு அரசாங்க வாகனங்கள் வழங்கப்படும் விடயம் குறித்து கட்சியின் முக்கியஸ்தர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
மாதாந்தம் 213 தொடக்கம் 595 லீற்றர் எரிபொருள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அவ்வாறு அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு அரசாங்க வாகனங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் வாக்குறுதி அளித்திருந்தனர்.
எனினும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ, அவரது பிரதியமைச்சர் ஆகியோரின் உதவியாளர்களுக்கு அரசாங்க வாகனங்களும், மாதாந்தம் 213 தொடக்கம் 595 லீற்றர் வரையான எரிபொருளும் வழங்கப்படும் விடயம் தற்போது தெரிய வந்துள்ளது.
அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்களுக்கு மாதாந்தம் 595 லீற்றர் எரிபொருளும் ஏனைய உதவியாளர்களுக்கு மாதாந்தம் 213 லீற்றர் தொடக்கம் எரிபொருளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தற்போது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையே முன்னைய அரசாங்கங்களின் பதவிக்காலத்தில் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்ட போதும், மாதாந்தம் 200 லீற்றர் வரையான எரிபொருள் மட்டுமே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |