வெளிநாடு செல்வோருக்கு கோவிட் தடுப்பூசி சான்றிதழ் - சுகாதார அமைச்சு உறுதி
வெளிநாடு செல்வோருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழை வழங்க முடியும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கணனிமயப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது அதிகாரபூர்வ தடுப்பூசி சான்றிதழாக ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன தடுப்பூசி பெற்றுக்கொண்டார்கள், எப்பொழுது பெற்றுக்கொண்டார்கள் என்பது பற்றிய விபரங்கள் இந்த சான்றிதழில் உள்ளடக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில நாடுகள் சில வகை சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் , அநேக நாடுகள் சான்றிதழ்கள் இன்றி நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், தடுப்பூசியின் அடிப்படையில் எந்தவொரு நாடும் பயணிகளை திருப்பி அனுப்பியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri