முல்லைத்தீவில் இதுவரை 900 ஆடைத்தொழில்சாலை பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் 900 ஊழியர்களுக்கு இதுவரை கோவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலை பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று முன்தினம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலை ஏனைய பணியாளர்களுக்கும் இன்று கோவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டது. இதன்படி இதுவரை மொத்தம் 900 ஆடைத்தொழில்சாலை பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே கோவி -19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ஆடைத்தொழில்சாலை பணியாளர்களில் 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 16 பேர் மீள வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
