தொடருந்து திணைக்களத்தை பொது நிறுவனமாக மாற்றும் அரசாங்கம்: கலந்துரையாடல் ஆரம்பம்!
தொடருந்து திணைக்களத்தை பொது நிறுவனமாக மாற்றுவதற்கான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மீளமைக்கும் திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஒருவரைக் கோடிட்டு தேசிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
ஒரு பொது நிறுவனம் அல்லது ஒரு சட்டப்பூர்வ நிறுவனம் வணிக அடிப்படையில் இயக்கப்படுகிறது. மற்றும் தலைவர் மற்றும் இயக்குநர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.
தொடருந்து திணைக்களம்
திணைக்களம் என்பது வணிக குணங்களைக் கொண்டிருக்கவில்லை மற்றும் நேரடியாக அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நிதி உதவிக்குத் தகுதி பெறச் சர்வதேச நாணய நிதியத்தால் இந்த சீர்திருத்தம் பரிந்துரைக்கப்படுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து திணைக்களம் வருடாந்தம் நட்டத்தில் இயங்கி வருவதாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தொலைவு தொடருந்து
2021ஆம் ஆண்டில், தொடருந்து திணைக்களம் 2.6 பில்லியன் ரூபாயை வருமானத்தை ஈட்டியுள்ளது. எவ்வாறாயினும், மேலதிக நேர வேலைகளைச் செலுத்துவதற்காக 2.3 பில்லியன் ரூபாய்களைச் செலவிடப்பட்டது.
ஊழியர்கள் மற்றும் சம்பளத்திற்காக 2.7 பில்லியன் ரூபாயை செலவிட்டது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தொடருந்து இயந்திர சாரதிகள், மற்றும் தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் காவலர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவு தொடருந்து வலையமைப்பு
உள்ளது. இருப்பினும், சில தண்டவாளங்கள் 50 ஆண்டுகள் பழைமையானவை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.



