அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை ஜனநாயக விரோதமானது
அரசாங்கத்தின் புதிய வரிகொள்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் இலக்குகளுக்கு அப்பால் சென்று செயல்படும் முனைப்பினை வெளிப்படுத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த இலக்கானது வரி நிர்வாகம் மற்றும் குற்றச் செயல்கள் என்பனவற்றிற்கு இடையிலான தொடர்பினை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வரி செலுத்தாத நபர்களை சிறையில் அடைக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்து வரி திரட்டும் அளவிற்கு சென்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரசாங்கம் வரி கொள்கைகளை அமல்படுத்துவது ஜனநாயக விரோத செயற்பாடாகும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் இது மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக வர்த்தக சமூகத்தினரை அச்சுறுத்தி வரி வசூலிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய வர்த்தக முயற்சிகள் உருவாதல் மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாதல் என்பனவற்றுக்கு இது பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தை புதிய முயற்சி நீதிமன்றத்தின் அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்துவது என்பது அரசியல் சாசனத்தை மீறுவதாகும் என தெரிவித்துள்ளார். வரி செலுத்த வேண்டியவர்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என தெரிவித்துள்ளார்.
எனினும் வரி அறவீட்டு நடவடிக்கைகள் ஜனநாயக விரோத முறையில் மேற்கொள்ளப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 11 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam