மதுபான விற்பனை தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திடீர் நடவடிக்கை
நாட்டில் விநியோகிக்கப்படும் மதுபானங்கள் தொடர்பில் விசேட சோதனை ஒன்றை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்றையதினம்(02.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஒரு வருடத்திற்கு முன்னர் மதுபானங்களின் தரம் குறித்து அரச அங்கீகாரம் பெற்ற ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தினோம்.
கலால் திணைக்களத்தின் வருவாய்
ஆனால், தற்போது அந்த ஸ்டிக்கர்களுக்கு பதிலாக வேறு ஸ்டிக்கர்களை மதுபான போத்தல்களில் ஒட்டுவதன் மூலம் பல்வேறு பிரைச்சினைகள் எழுந்துள்ளன.
நாட்டிற்கு கிடைக்கப்பெறும் வருவாயில் கலால் திணைக்களத்தின் வருவாய் அதிக இலாபத்தை பெற்றுதருகிறது.
வீழ்ந்த பொருளாதாரத்தில் இருந்து மீண்டெழும் ஒரு நாட்டின் வருவாயில் விளையாட விட முடியாது. எனவே யாரேனும் தவறு செய்தால் அதற்கான தண்டனை வழங்கப்படும்.
மேலும், அவர்களை கைது செய்ய அனைத்து வழிகளையும் அரசிற்கு ஏற்படுத்தி தாருங்கள்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |