அரசாங்கத்தின் கொள்கைகள் மீது சஜித் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டு
தவறான தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் தனது கொள்கைகளை வகுக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராமவில் இன்று(29.08.2026) நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசிடம் தெளிவான திட்டங்கள் இல்லை
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் மக்கள் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வருமானமும் ஊதியமும் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, ஒரு நபர் 30 நாட்களுக்கு வாழ்வதற்கு ரூ. 17,315 போதுமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்தத் தொகையில் ஒருவரால் உண்மையில் 30 நாட்களுக்கு வாழ முடியுமா?

மேலும், மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை புரிந்துகொள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது, நாட்டின் மக்கள் தொகையில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வறுமையில் வாழ்கின்றனர்.
இந்த வறிய சமூகத்தை மேம்படுத்துவதற்கு அரசிடம் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. 'அஸ்வெசும' நலத்திட்டத்தைக் கூட இந்த அரசாங்கம் தற்போது குறைத்து வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.. மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தது இதற்குதானா Cineulagam
நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய் News Lankasri