வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் குறித்து உலக வங்கியும் இலங்கை அரசாங்கமும் கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயரை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
கலந்துரையாடலின் போது, புதிய அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான உலக வங்கியின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள்
உலக வங்கியின் ஆதரவுடன் நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களும் திட்டமிட்டபடி தொடர்ந்து செயற்படுத்தப்படும் என்று அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
இதன்போது, கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான முன்முயற்சிகள், பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்துடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் மற்றும் பல முக்கியப் பகுதிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அவர்கள் இருவரும் ஆழமான உரையாடலை நடத்தினர்.
பெருந்தோட்ட மக்களின் சவால்கள்
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது கலந்துரையாடலின் மற்றுமொரு முக்கிய அம்சமாக இருந்தது.

அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காணி மற்றும் வீடமைப்பு சவால்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இதேவேளை, விவசாயம், கடற்றொழில், சுற்றுலா, கல்வி மற்றும் சுகாதாரம் என்பன அரசாங்கத்தின் முதன்மையான அபிவிருத்தி முன்னுரிமைகளாகும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam