ஈஸ்டர் தாக்குதல் குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியை ஏற்றுக் கொண்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படுவர் என ஜனாதிபதி அநுர உறுதிமொழி வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
எனினும் பிரதான சூத்திரதாரியை கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல என அண்மையில் அமெரிக்காவில் வைத்து ஜானதிபதி அநுர கூறியுள்ளதாக அவர் ஹர்ஸன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கத்தோலிக்க மக்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களையும் அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டு பிடிப்பது சுலமான விடயமன்று என்பதை ஜனாதபிதி அநுர அறிந்திருக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் நாட்டின் கலாசாரத்தை அழித்து ஜே.வி.பி கலாசாரத்தை நிறுவ முயற்சிப்பதாக அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.