இலங்கையில் வைத்தியசாலைகளில் நிறைந்து வழியும் கோவிட் தொற்றாளர்கள் - வெளியான காணொளி
ராகம வைத்தியசாலையில் கோவிட் தொற்றாளர்களின் பரிதாப நிலை என கூறி பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியசாலையின் வெளிப்புறங்களில் பாய்கள் மற்றும் பத்திரிகைகளை விரித்து கோவிட் தொற்றாளர்கள் நித்திரை கொள்ளும் காட்சிகள் அதில் உள்ளமையே இதற்கான காரணமாகும்.
இலங்கையில் நாளாந்தம் கோவிட் தொற்றாளர்கள் இரண்டாயிரத்திற்கு மேல் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், வைத்தியசாலையின் திறன் உச்சத்ததை எட்டியுள்ளது.
தற்போது வரையில் சிகிச்சை அவசியமாக உள்ள தொற்றாளர்கள் மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
ஏனையவர்கள் இடைநிலை சிகிச்சை நிலையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
