ஆசிரியை ஒருவருக்கு கோவிட் தொற்று - மாணவர்கள் தனிமைப்படுத்தல்
மாத்தறையில் ஆசிரியை ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தெனியாய கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் அனைத்து மாணவ மாணவிகளையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த மொரவக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தீர்மானித்துள்ளது.
கடந்த 27 ஆம் திகதி குறித்த ஆசிரியை பாடசாலைக்கு வந்திருந்ததாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்திலும் அவருக்கு தொற்று இருந்தமை தெரிய வந்துள்ளது. பாடசாலையின் தரம் ஐந்து மாணவர்கள் சிலர் ஆசிரியையுடன் நெருங்கிப் பழகியவர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், ஆசிரியை அன்றைய தினம் பாடசாலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலும் கலந்துக் கொண்டு இருந்ததாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
அதன்படி, பாடசாலை மாணவர்கள் அனைவரும் அவதான நிலையில் உள்ளதால், அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 49 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
