ஆரம்பப்பிரிவு ஆசிரியர் ஒருவருக்கும் மாணவனுக்கும் கோவிட் தொற்று உறுதி
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவுக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கும், ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து குறித்த ஆசிரியர் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே அவருக்கு இன்று (10.11) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண்பதற்கும் சுகாதரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்
இதுவரை இரு ஆசிரியர்களுக்கும், 8 மாணவர்களுக்கும் கோவிட் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan