வயோதிபர் இல்லமொன்றில் 28 பேருக்கு கோவிட் தொற்று
காலி, உனவட்டுவன பிரதேசத்திலுள்ள வயோதிபர் இல்லத்தில் 28 வயோதிர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ஹபராதுவ பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த வயோதிபர் இல்லத்தில் 164 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டின் பரிசோதனையிலேயே 28 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வயோதிபர் இல்லத்தில் மூன்று தினங்களுக்கு முன்னர் 64 வயதுடைய ஒருவர் மரணமடைந்தார்.
இதையடுத்தே குறித்த வயோதிபர் இல்லத்தில் 164 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான அனைவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 19 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
