வாழைச்சேனையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் 9 பேருக்கு கோவிட் தொற்று
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட மருதநகர் கிராமத்தில் தொற்றுக்குள்ளான நபர்களுடன் நெருங்கியவர்களுக்கு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மருதநகர் கிராமத்தில் 24 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்ட நிலையில், கிராமம் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொற்றுக்குள்ளான நபர்களுடன் நெருங்கியவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 45 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கல்மடு கிராம அதிகாரி பிரிவிலுள்ள மருதநகர் கிராமம் தொடர்ந்து இராணுவம் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்று அதிகரித்துக் காணப்படும் நிலையில், தொடர்ச்சியாக சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெறுவதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
