முல்லைத்தீவு மருத்துவமனையில் உயிரிழந்த ஒருவருக்கு கோவிட் தொற்று
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுநீரக நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நெடுங்கேணியினை சேர்ந்த குறித்த நோயாளி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுநீரக நோய்க்காக சிகிச்சை பெற முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த நோயாளிக்கு ஏற்கனவே பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்த முடிவுகளின் படி அவருக்கு கோவிட் தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நோயாளி சிறுநீரக நோய்கான குருதி மாற்றலுக்காக ஏற்கனவே யாழ் .போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு குருதி மாற்றப்பட்டு வீடு திரும்பிய நிலையில்,அதிகமாக குருதிபெருக்கு காரணமாக அவர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
