இலங்கையில் கோவிட் - 19 மரணங்கள் மேலும் உயர்வு!
நாட்டில் கோவிட் - 19 மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் நான்கு கோவிட் - 19 மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது, இதன்படி மொத்த மரணங்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்வடைந்துள்ளது.
1. வல்கம்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான பெண் ஒருவர் நேற்றைய தினம் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 காரணமாக ஏற்பட்ட சுவாசப்பை கோளாறினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. தேவாலபொல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் கடந்த 1ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நோய்த் தொற்று, நீரிழிவு மற்றும் வலிப்பு நோய்க் காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக கோளாறு, கோவிட் - 19 நிமோனியா மற்றும் இரத்தம் விசமாகியமை ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. யட்டியாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் கடந்த 1ம் திகதி உயிரிழந்துள்ளார். நீரிழவு, இருதய நோய், சிறுநீரக நோய் மற்றும் கோவிட் - 19 நிமோனியா ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.