இந்தியா, சீனாவிடம் இருந்து பதில் இல்லை! எரிபொருள் இறக்குமதியில் சிக்கல்
இந்தியாவும் சீனாவும் தாமதம்
எதிர்வரும் வாரங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்வதற்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து நிதிப்பெறுதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து எரிபொருள் விநியோகத்திற்கான முறைப்படுத்தப்படாத திட்டங்களை பரிசீலிக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி, எரிபொருள் கொள்வனவுகளுக்காக குறைந்தது ஆறு முறைப்படுத்தப்படாத, முன்மொழிவுகளுக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
180 நாள் கடன்
இதில் 180 நாள் கடன் அடிப்படையில் எரிபொருளை வாங்குவதற்கான கோரிக்கையும் அடங்கும்.
இந்த மாதத்துக்குள் 3 எரிபொருள் கப்பல்கள் மாத்திரமே வரவுள்ள நிலையில், இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரிக்காக இந்தியாவிடமிருந்து பதில்களை எதிர்பார்க்கும் இலங்கை அரசாங்கம், எரிபொருளுக்காக சீனாவிடம் இருந்தும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்த்துள்ளது.
விநியோகஸ்தர்கள் பிரச்சினை
இந்தநிலையில், இந்த வாரத்தில் மாத்திரம், இலங்கை, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளதாகவும், எனவே விநியோகஸ்தர்களை அழைப்பது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஒரு மாதத்திற்கு 525 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு கடன் வசதி!! கைச்சாத்திடப்பட்டது ஒப்பந்தம் (படம்)