வடக்கில் ஐந்து வயது சிறுவன் உட்பட மேலும் 26 பேருக்கு கோவிட் தொற்று
வவுனியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் 26 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டவர்களில் உயிரிழந்த இருவரும் உள்ளடங்குகின்றனர். அவர்களில் ஒருவர் சாவகச்சேரியிலும், மற்றொருவர் வவுனியாவிலும் உயிரிழந்துள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும், யாழ். போதனா வைத்தியசாலையில் 5
பேரும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 பேரும், மன்னார் மாவட்ட
வைத்தியசாலையில் 3 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
