யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 25 பேருக்கு கோவிட் தொற்று
யாழ். தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த 25 பேருடன் தங்கியிருந்த 64 பேர் கல்லூரியிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவரையும் தத்தமது வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரின் தீர்மானத்திற்கு அமைய அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் எனவும், அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri