வெளிநாடு செல்ல முற்பட்ட இலங்கையர்களுக்கு கோவிட் - யாழில் 7 பேர் அடையாளம்
யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் 13 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் வெளிநாடு செல்வதற்காக தயாரானவர்கள் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொண்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 13 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், வைத்தியசாலையின் ஊடாக பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேர் கடவுச்சீட்டு பெற்றுவதற்கான பரிசோதனை மேற்கொண்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கோவிட் தொற்று காரணமாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குப்பிளான் கிராமத்தினைச் சேர்ந்த பெண் என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
