மக்கள் முன்னிலையில், அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளது
மக்கள் முன்னிலையில் அராசங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றிய குமார ஜயகொடிக்கு எதிராக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கம் வெற்றி பெற்றது என தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் தற்பொழுது நாட்டின் சக்தி வளத்துறையில் பாரியளவில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தரம்குறைந்த நிலக்கரி இறக்குமதி குறித்து ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டிய போது அவற்றை அரசாங்கம் உதாசீனம் செய்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் கூடுதல் விலை கொடுத்து எரிபொருள் கொள்வனவு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டின் எரிபொருள் மற்றும் மின்சார நுகர்வோரை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri