மகிந்த மற்றும் ரணிலுக்கு ஒதுக்கப்பட்ட மேலதிக வாகனங்கள்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட மேலதிக வாகனங்களை மீளப்பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
1986ஆம் ஆண்டின் ஜனாதிபதிகள் உரிமைச் சட்டமானது, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அமைச்சரவை அமைச்சருக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்ற சலுகைகளையே வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள்
2010ஆம் ஆண்டு மே மாதத்தில், அப்போதைய ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, அமைச்சரவை அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு மூன்று வாகனங்களையே வைத்திருக்கும் உரிமை உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், திணைக்களத்தின் தகவல்படி, மகிந்த ராஜபக்ச, தாம் பயன்படுத்திய 16 வாகனங்களில் 8 வாகனங்களை ஏற்கனவே திருப்பி அனுப்பியுள்ளார். அதேசமயம் தற்போது விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![கிளீன் தையிட்டி..!](https://cdn.ibcstack.com/article/0cf0c8c5-ad68-4e31-841a-7e29cf4596c2/25-67b1e86bd37bd-md.webp)
கிளீன் தையிட்டி..! 9 நிமிடங்கள் முன்
![இந்திய கடவுச்சீட்டு இருந்தால் மேலும் 6 நாடுகளிலிருந்து UAE-க்கு விசா இல்லாமல் நுழையலாம்](https://cdn.ibcstack.com/article/6fe6c8f4-9b2d-4a81-bfd3-c06003797488/25-67b0aaad5bbdd-sm.webp)
இந்திய கடவுச்சீட்டு இருந்தால் மேலும் 6 நாடுகளிலிருந்து UAE-க்கு விசா இல்லாமல் நுழையலாம் News Lankasri
![43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல்](https://cdn.ibcstack.com/article/2b7e06f8-b8d3-4df6-b027-77adf78aedf7/25-67b05755ba16c-sm.webp)
43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam
![உக்ரைன் அமைதி பணிக்கு பிரித்தானியா தயார் நிலையில் இல்லை-முன்னாள் ராணுவத் தலைவர் வலியுறுத்தல்](https://cdn.ibcstack.com/article/225449b6-ce04-433e-8571-46a9f50158e9/25-67b0bdc8d2c04-sm.webp)
உக்ரைன் அமைதி பணிக்கு பிரித்தானியா தயார் நிலையில் இல்லை-முன்னாள் ராணுவத் தலைவர் வலியுறுத்தல் News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியை இளவரசி போல் நடத்துவார்கள்... யார் யார்ன்னு பாருங்க](https://cdn.ibcstack.com/article/45de4e22-03e3-440b-a406-5ace07407c5a/25-67b06c5d55aa8-sm.webp)