28 வீதத்தினால் உயர்வடைந்துள்ள கோவிட் மரணங்கள்
நாட்டில் கோவிட் மரணங்கள் 28 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக கோவிட் தடுப்பு குறித்த ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்துடன் ஒப்பீடு செய்யும் போது கோவிட் மரணங்கள் 28 வீதமாகவும் தொற்று உறுதியாளர்கள் சிறிதளவு உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் நோய்த் தொற்று நிலைமை குறையவில்லை எனவும் அதிகரித்து செல்லும் நிலைமையையே அவதானிக்க முடிகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயணத்தடையை நீடிப்பதா இல்லையா என்பதனை 14ம் திகதி தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்தற்கான முனைப்புக்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நோர்வே, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட வைத்தியசாலைக்கு இன்று விஜயம் செய்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri