கடந்த நான்கு நாட்களில் கொழும்பில் ஏற்பட்ட மாற்றம்!
கொழும்பு மாநகரில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் கோவிட் தொற்றால் எவரும் உயிரிழக்கவில்லை என கொழும்பு மாநகர தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகக் கொழும்பில் ஐந்து நோயாளிகளே நாளாந்தம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் நாங்கள் 220 பி.சி.ஆர். சோதனைகளையும், 300 துரித அன்டிஜன் சோதனைகளையும் முன்னெடுக்கின்றோம். இவற்றில் இரண்டு வீதத்துக்கும் குறைவானவர்களே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதால் கோவிட் வைரஸ்
மீண்டும் தலைதூக்கலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri