மட்டக்களப்பில் கோவிட் சடலங்கள் தேக்கம் - மின்னியல் தகனசாலையை நிறுவுமாறு கோரிக்கை

Covid-19 Covid death Batticaloa hospital Batticalao
By Independent Writer Sep 05, 2021 09:15 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்திற்கென மின்னியல் தகனசாலை ஒன்றினை நிறுவ வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால் அதன் பணிப்பாளர் க.கலாரஞ்சனியின் ஒப்பத்துடன் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்- 19 தொற்று காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல மரணங்கள் சம்பவித்துள்ளது. இந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து மட்டும் இதுவரை கோவிட்-19 தொற்றினால் சம்பவித்த 202 மரணங்களில் 27 சடலங்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளது.

இச்சடலங்களைத் தகனம் செய்வதற்காக மட்டக்களப்பிலிருந்து 100 கி.மீ தொலைவில் பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள மின்னியல் தகனச்சாலைக்கு தகனம் செய்வதற்காகக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அப்பிரிவிற்குட்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோரின் முன் அனுமதி பெறப்பட வேண்டியுள்ளதுடன் மின்னியல் தகனத்தினை மேற்கொள்ளவற்காக திம்புலாகலை பிரதேச சபையிடமிருந்தும் அனுமதியைப் பெற்று அதன் பின்னரே குறித்த உடலத்தினை தகனம் செய்வதற்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.

மேலும், தகனம் செய்வதற்காகச் சடலம் ஒன்றினை அனுப்புவதற்குச் சடலத்தினை ஏற்றிச் செல்வதற்கென ஒரு வாகனம், அச்சடலத்தினை இறக்கி உரிய தகனச்சாலைக்கு கொண்டு சென்று கொடுப்பதற்கான வைத்தியசாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காகப் பிறிதொரு வாகனம், அத்துடன் இரு சாரதிகள் மற்றும் 06 உதவியாளர்கள் என ஆளணியினரும் ஒழுங்கு செய்யப்படவேண்டியுள்ளது.

ஆனால் தற்போது காணப்படும் இந்நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலை ஊழியர்களின் வரவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உரிய நேரத்திற்குக் குறித்த உடல்களைத் தகனம் செய்வதற்காக அனுப்பி வைப்பதில் கால தாமதம் ஏற்படுவதுடன் வைத்தியசாலையின் பிரேத அறையிலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகின்றது.

எனவே மேற்படி நிலைமையினை கருத்தில் கொண்டு எமது மாவட்டத்தில் இறந்த உடல்களைத் தகனம் செய்வதற்கு மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுவதற்குப் பொறுப்பு வாய்ந்த அனைவரும் ஒருமித்து தீர்க்கமான முடிவினை எடுத்து மட்டக்களப்பு மாநகர சபை உடனடியாக தகனசாலை ஒன்றினை நிறுவ வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மிக விரைவாகச் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக எமது சமூகம் பல கோடி பணத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வழங்கியிருக்கின்றது.

இவ்வாறான சூழலில் இக்கோரிக்கையைச் சர்வதேசப்படுத்துவதினூடாக மிக விரைவாகச் செயற்படுத்தச் சரியான தருணமிது. இதைச் சரியாக மாநகர ஆட்சி பயன்படுத்துமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US