நாட்டில் வன்முறைகளை தூண்ட அரசாங்கம் முயற்சி – அனுரகுமார
அரசாங்கம் இன மற்றும் மத வன்முறைகளை தூண்டுவதற்கு முயற்சிப்பதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் இருப்பிற்காக அரசாங்கம் இவ்வாறு சூழ்ச்சி செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் சில தொலைக்காட்சி அலைவரிசைகள் இன, மத முரண்பாடுகளை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரம்
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தற்பொழுது இணைந்து கொண்டுள்ளதாகவும், 75 ஆண்டுகளாக நாட்டை சீரழித்த ஆட்சியாளர்களை அவர்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை கண்டு அரசாங்கம் அஞ்சுவதாகவும் இதனால் முரண்பாடுகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு, தெற்கு எனவும் சிங்களம், தமிழ் மற்றுமு; முஸ்லிம் எனவும் பிரித்தாள அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் இவ்வாறான சதி வலையில் மக்கள் சிக்கிவிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri