கொழும்பில் வீடொன்றில் உயிரிழந்த மூன்று பேருக்கு கோவிட் தொற்று உறுதி
கொழும்பின் புறநகர் பகுதியான மாலபேயில் வீட்டிலிருந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலத்திற்கு மேற்கொண்ட பிரேத பரிசோதனைகளுக்கு அமைய, அவர்கள் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒரே வீட்டில் வசித்து வந்த கணவன், மனைவியும் அயல்வீட்டு பெண்ணொருவரும் அடங்குவதாக மாலபேக்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் 84 – 91 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த தம்பதியினரின் மகனும் அவரது மனைவியும் கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மற்றைய பெண்ணின் மகளும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam