மட்டக்களப்பு பிரதேசத்தில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தினுள் உள்ள சமுர்த்தி வங்கியில் கடமையாற்றி வரும் 15 பேர் உட்பட புளியந்தீவு பிரதேசத்தில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புளியந்தீவு பிரதேசத்தில் 35 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே இவ்வாறு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த காரியாலயம் மற்றும் புளியந்தீவு பொது சுகாதார காரியாலயத்தில் இன்று 111 பேருக்கு எழுமாறாக அன்டிஜன் பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அரசாங்க அதிபர் காரியாலயத்தினுள் இயங்கி வரும் சமுர்த்தி வங்கியில் கடமையாற்றி வருகின்ற 15 பேருக்கும், புளியந்தீவு பகுதியிலுள்ள 20 பேர் உட்பட 35 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை,கோவிட் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லாத நிலை காரணமாக தொற்று கண்டறியப்பட்டவர்களை அவர்களது வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam