வவுனியா நகரில்12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியா நகரில் இராணுவம் மற்றும் பொலிஸார் ஆகியோரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் சுகாதாராப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் ஒரு தொகுதி முடிவுகள் இன்று மாலை வெளியாகிய நிலையில் 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா நகரப்பகுதியில் பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, மில்வீதி, சந்தை உள்வட்ட வீதி என்பன நேற்றைய தினம் (01.07) இராணுவம் மற்றும் பொலிஸாரால் முடக்கப்பட்ட நிலையில் வர்த்தக நிலையங்களில் பணியாற்றியோர், பல்வேறு தேவைகளுக்காக நகரத்திற்கு வருகை தந்தோர், சாரதிகள் என பல்வேறு தரப்பினரிடமும் 4 இடங்களில் பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதில் சந்தை உள்வட்ட வீதியில் 205 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் வெளியாகிய நிலையில் வவுனியாவில் 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களை கோவிட் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
