இரட்டை கெப் வாகனங்களை அவசரமாக கொள்வனவு செய்யும் அரசாங்கம்
1,775 புதிய இரட்டைக்கெப் (Double-Cab) வாகனங்களை 42.8 பில்லியன் ரூபா செலவில் அரசாங்கம் அவசரமாக கொள்வனவு செய்ய தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
சர்வதேச விலைமனு நடைமுறையான 42 நாட்களை மீறி, வெறும் 12 நாட்களுக்குள் விலைமனு செயல்முறையை நிறைவு செய்து, இந்த அவசர கொள்வனவுக்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலைமனுக்கான விதிமுறை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக முன்னர் முன்வைக்கப்பட்ட 2,000 வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது வேறு வடிவில் இந்த கொள்வனவு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், இந்த விலைமனுக்கான விதிமுறைகளான குறைந்தபட்ச வருடாந்த வருமானம் 10 பில்லியன் ரூபா, நாடு முழுவதும் சேவை நிலையங்கள் மற்றும் 2,500cc எஞ்சின் திறன் போன்ற நிபந்தனைகள், ஒரே ஒரு நிறுவனத்தை மாத்திரம் ஏலத்தில் கலந்துகொள்ளத் தகுதி பெறச் செய்வதன் மூலம் கொள்வனவு செயல்முறையின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளாவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri