சங்கை நிராகரிக்கவில்லை: கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சங்கை தோற்கடிக்கவேண்டும் என கடுமையான பிரயத்தனங்களை முன்னெடுத்தவர்கள் இன்று சங்கை நிராகரித்ததாக தமது தரப்பு மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(23.10.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த கருணாகரம்,
உரிமை போராட்டம்
தொடர்ச்சியான எங்களது உரிமை போராட்டத்தில் ஏமாற்றம், துரோகம்,விமர்சனம்,காட்டிக்கொடுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைகள் பெறப்படாமல் இந்த நாட்டினை மாறி மாறி ஆட்சியதிகாரத்திற்கு வரும் அரசுகள் அவர்களின் பிரச்சினைகளை புறக்கணிக்கின்றனர்.
தமிழர்களின் தேசவிடுதலைப் போராட்டமானது அரசியல் ரீதியாக மெல்ல மெல்ல நடைபெற்றுவருகின்றது. காலப்போக்கில் தமிழ் மக்களின் தேர்தல் சின்னம் மாறுபட்டு வருகின்றது.
ஜனாதிபதித்தேர்தலில் ஒரு சின்னம்,நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சின்னம் என ஆதரவு வழங்கிவரும் இந்த காலத்தில் சூரியன் சின்னம், பின்னர் வீட்டுச்சின்னம் இன்று தமிழர்களின் தமிழ் தேசியத்தின் அடையாளமாக சங்குச்சின்னம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
