வடக்கு மாகாண வைத்தியர்களுக்கு ஆளுநர் விசேட வேண்டுகோள்
உயிரைக்காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதை மனதிலிருந்து சேவையாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தில் அண்மையில் பரவிய எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் என்பனவற்றைக் கட்டுப்படுத்துவதில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் செயற்பாடு சிறப்பாக அமைந்ததாக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் குறிப்பிட்டார்.
நிலுவைக் கொடுப்பனவு
மேலும் வடக்கு மாகாணத்தில் தாதிய உத்தியோகத்தர்களின் நிலுவைக் கொடுப்பனவுகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.

சுகாதரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி. வி.பி.எஸ்.டி.பத்திரண, வடக்கில் முழு இயங்கு நிலையில் செயற்படாத மாங்குளம், கிளிநொச்சி, பருத்தித்துறை மருத்துவமனைகளில் வெளிநாட்டு நிதியுதவியில் அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை நிலையங்களை விரைவில் இயக்குவதற்கு ஏதுவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
அதனை உடனடியாகச் செயற்படுத்துவதற்கான சாதகமான நிலைமைகள் தொடர்பில் ஆராயுமாறு ஆளுநர் பணித்ததுடன், விரைவில் இது தொடர்பான கலந்துரையாடலை ஏற்பாடு செய்யுமாறும் பணித்துள்ளார்.
சிறுவர் பராமரிப்பு திணைக்களம்
அத்தோடு, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ், சான்றுபெற்ற பாடசாலை மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான கல்வி வசதியை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்தார்.
அதனை உடனடியாகச் செயற்படுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்
மேலும் நியதிச் சட்ட ஏற்பாடுகள் போதியளவு இல்லாமையால் கொள்கை ஆவணத்துக்கான அனுமதிக்கான கோரிக்கையையும் அவர் ஆளுநரிடம் முன்வைத்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam