முதலீட்டாளர்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க வாட்ஸ்அப் இலக்கத்தை வழங்கிய ஆளுநர் (Photos)
வடக்கில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிர்நோக்குகின்ற நிர்வாக நீதியான பிரச்சினைகள் தொடர்பில் தனக்கு முறைப்பாடுகளை வழங்க வாட்ஸ்அப் இலக்கத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தலைமையில் இன்று இடம்பெற்ற வடமாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு இலகத்தை வழங்கியுள்ளார்.
குறித்த நிகழ்வில் பங்குபற்றிய முதலீட்டாளர்கள் தமது குறைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வடக்கில் உள்ள அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் போதாது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள்.
தமது உற்பத்தி துறைகள் தொடர்பில் சட்ட ரீதியான ஆவணங்கள் மற்றும் தொழில் விரிவுபடுத்துதல்ளை மேற்கொள்வதற்கு கீழ்மட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் தமக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக மன்னார் மாவட்டத்தில் இருந்து கலந்துகொண்ட முதலீட்டாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது யாழ்ப்பாண வணிகர் சங்கமும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கூறியதுடன், வடக்கிலுள்ள வளங்களை பயன்படுத்துவதற்கு இங்குள்ள முதலீட்டாளர்கள் தயாராக இருக்கின்ற நிலையில் அதனை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது பதிலளித்த வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தங்களின் கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும், அது தொடர்பில் தனது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை வழங்க முடியும் என கூறி இலக்கத்தை வழங்கியுள்ளார்.
தொடர்புடைய செய்தி.............
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்




Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
