இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த கடற்படையினரின் ஆதரவு வேண்டும்! ஆளுநர் கோரிக்கை
இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.
புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன, இன்று (12.08.2026) புதன்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியபோதே ஆளுநர் இந்த விடயங்களை வலியுறுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல்வளப் பாதுகாப்புக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தலாக காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
முன்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகைகளைதான் மாகாணசபைகளுக்கு ஒதுக்கீடு செய்து வந்தார்கள்! பிரபு எம்.பி
சட்ட நடவடிக்கை
குறிப்பாக, சட்டவிரோத கடற்றொழில் முறைகள் கடல் வளங்களை அழிப்பதுடன், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய கடற்தொழிலையும் பாதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் ஆளுநர் கவனம் செலுத்தினார்.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயற்பட்டு, சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் வட மாகாண கடற்படைத் தளபதியிடம் கேட்டுக்கொண்டார்.