பணிக்கு சமூகமளிக்காமல் சம்பளம் பெறும் அரச ஊழியர்கள்! வெளியாகியுள்ள தகவல்
அரச ஊழியர்களே அதிகளவில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கின்றனர் என அரச நிர்வாக அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைவிரல் அடையாளம்
அநேகமான அரசாங்க நிறுவனங்களில் வரவுப் பதிவிற்காக கைவிரல் அடையாளம் பயன்படுத்தாத காரணத்தினால் இவ்வாறு பணி நேரத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர் காலம் தாழ்த்தியே பணிக்கு சமூகமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சம்பளத்துடன் விடுமுறை
சம்பளத்துடன் விடுமுறை பெற்றுக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அநேகமான அரசாங்க நிறுவனங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பணிக்கு சமூகமளிக்காதே சம்பளம் கிடைக்கப் பெறுவதனால் அரச ஊழியர்கள் முன்னரை விடவும் பணிகளை உதாசீனம் செய்து வருவதாக அந்த அதிகாரி தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam